இம்மாதம் 19ஆம் தேதி வெளியிடப் படவிருக்கும் அடுத்த நிதியாண் டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்ட அறிக்கையில் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வு பற்றி அறிவிக்கப்படலாம் என்று பொருளியல் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். பொருளியலாளர்கள் பத்துப் பேரிடம் இவ்வாண்டின் வரவு செல வுத் திட்டம் பற்றி சிங்கப்பூரில் உள்ள ராய்ட்டர்ஸ் செய்தி நிறு வனம் அண்மையில் ஓர் ஆய்வை நடத்தியது.
அதில் ஒன்பது பேர் ஜிஎஸ்டி உயர்வு குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் அறிவிக்கக்கூடும் என்று கருத்துரைத்தனர். கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து ஜிஎஸ்டி வரியில் உயர்வு அறிவிக்கப்படவில்லை. சிங்கப்பூரில் வேகமாக அதிக ரித்து வரும் மூப்படையும் மக்கள் தொகையைக் கருத்தில்கொண் டும் அவர்களுக்கான எதிர்கால செலவுகளைக் கருத்தில் கொண் டும் அரசாங்கத்தின் வருமானத் தைக் கூட்ட பொருள் சேவை வரி உயர்த்தப்படலாம் என்று பொருளி யல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

