பொதுப் போக்குவரத்தைப் பயன் படுத்தும் பயணிகளின் திருப்தி அளவு சென்ற ஆண்டு சரிந்த தாகப் பொதுப் போக்குவரத்து மன்றத்தின் வருடாந்தர திருப்தி அளவு ஆய்வு கண்டறிந்தது. கடந்த அக்டோபர் மாதம் ரயில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெள் ளம் போன்ற கடுமையான சம்ப வங்களைத் தொடர்ந்து, பயணி களின் திருப்தி அளவு 2016ஆம் ஆண்டின் 96.4 விழுக்காட்டில் இருந்து சென்ற ஆண்டு 94.5 விழுக்காடாகக் குறைந்தது.
அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வுக்காக, 15 வயது முதலான 5,007 பயணிகளை மன்றம் பேட்டி கண்டது. பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், எம்ஆர்டி ரயில் நிலையங்கள் ஆகிய இடங் களில் ஆய்வு நடத்தப்பட்டது. பயண நேரம், நம்பகத்தன்மை, போக்குவரத்து மையங்களைச் சென்றடையும் வசதி போன்றவற் றின் அடிப்படையில் பொதுப் போக் குவரத்து சேவையை மதிப்பிடுமாறு பங்கேற்பாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நிகழ்ந்த ரயில் சேவை தடையின் போது பயணிகள் நொவினா எம்ஆர்டி நிலையத்தில் காத்திருந்த னர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

