ஆயிரக்கணக்கான தங்கள் சக வெளிநாட்டு ஊழியர்களுக்கு முக்கியமான தகவல்களைக் கொண்டு சேர்க்கவும் அவர் களுக்குள்ள பிரச்சினைகளை தன்னிடம் தெரிவிக்கவும் வெளி நாட்டு ஊழியர் நிலையம் 1,500 வெளிநாட்டு ஊழியர்களை தனது 'ஃபேர்' கட்டமைப்பு அடித்தளத் தூதுவர்களாக நிய மித்துள்ளது. அவ்வப்போது அந்தத் தூது வர்களைச் சந்திக்கும் நிலையம் வேலையிடக் காயங்களுக்கான இழப்பீடு, கள்ளத்தனமான வேலை செய்யும் குற்றம் போன்ற முக்கிய விவகாரங்கள் தொடர் பில் கலந்துரையாடல்கள் வழி தகவல்களைத் தெரிவிக்கும். அவர்கள் அந்தத் தகவல் களை தங்களுடன் வேலை செய் யும் அல்லது தங்கும் மற்ற வெளி நாட்டு ஊழியர்களிடம் தெரிவிப் பார்கள்.
'பேர்' கட்டமைப்பில் நான்கு முக்கிய அம்சங்கள் உள்ளன. நியாயத்தன்மை, உதவி புரிதல், ஒருங்கிணைப்பு, பிரதிநிதித்துவம் ஆகியவையே அவை. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் வெளிநாட்டு ஊழியர் நிலையம் கடந்த மாதம் 28ஆம் தேதி 'ஃபேர்' கட்டமைப்பு அடித் தளத் தூதுவர் 100 பேரை 'பாகுமதி' திரைப்படத்தைப் பார்க்க ரெக்ஸ் திரையரங்கத் துக்கு அழைத்துச் சென்றது. தங்கள் சக தூதுவ நண்பர் களுடன் திரைப்படத்தைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

