மூன்று தலைமுறை வீடுகள் அடுத்ததாக இவ்வாண்டு மே மாதம் நடைபெறும் தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகளின் விற்பனை நடவடிக்கையின்போது யீஷூனில் விற்பனைக்கு வரும் என வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) நேற்று தெரிவித்தது. திருமணமான அல்லது திரு மணம் புரியவிருக்கும் தம்பதியரும் தம்பதியரில் ஒருவரது பெற்றோரும் உள்ளடங்கிய குடும்பங்கள் மூன்று தலைமுறை வீடுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
கடந்த 2013ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் விற்பனைக்கு வந்த மூன்று தலை முறை வீடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் பத்தில் எட்டு வீடுகள் விற்பனை நடவடிக்கையின் போது விற்கப்பட்டதாகவும் வீவக தெரிவித்தது. இந்த வீடுகளில் 44 விழுக் காட்டை முதல்முறையாக விண் ணப்பம் செய்வோரும் மீதி 56 விழுக்காட்டை இரண்டாம் முறை யாக விண்ணப்பம் செய்வோரும் வாங்கினர்.

