புதிய ரயில் நிதிக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, எஸ்பிஎஸ் டிரான் சிட் நிறுவனத்தால் நடத்தப்படும் வடக்கு=கிழக்கு ரயில்பாதை, செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதை ஆகியவற்றின் இயக் கப் பயன்பாட்டுச் சொத்துகள் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து நிலப் போக்குவரத்து ஆணையத்தின்கீழ் வரும். ரயில்கள், சமிக்ஞை, மின் கட்டமைப்புகள் ஆகியவற்றை உள் ளடக்கிய இந்தச் சொத்துகளின் மதிப்பு கிட்டத்தட்ட $30.8 மில் லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் மூலம் தீவின் ரயில் சொத்துகள் முழு வதும் அரசாங்கத்தின்கீழ் வந்து விடும்.
டௌன்டவுன் வழித்தடமே ரயில் நிதிக் கட்டமைப்பின்கீழ் வந்த முதல் ரயில்பாதை. அதன் பின் எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் வடக்கு-தெற்கு, கிழக்கு=மேற்கு, வட்டப் பாதை, புக்கிட் பாஞ்சாங் எல்ஆர்டி ஆகிய நான்கு வழித் தடங்களின் சொத்துகள் அந்தக் கட்டமைப்பின்கீழ் வந்தன. இவற் றின் மொத்த மதிப்பு $1.06 பில் லியன் என மதிப்பிடப்பட்டது. புதிய கட்டமைப்பானது முத லீட்டுச் செலவினம், வருவாய் இடர்களில் இருந்து எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தை விடுவிப்ப தால், இயக்க நடைமுறைகளிலும் ரயில் கட்டமைப்பைப் பராமரிப்ப திலும் அந்நிறுவனம் கவனம் செலுத்த இயலும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரி வித்தது.

