ஜூரோங் தீவில் புதர் தீ

ஜூரோங் தீவில் புதர் தீ

1 mins read
101034d4-c380-41df-9147-d9c48ec47ce3
-
Google News Preferred Icon

ஜூரோங் தீவில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட புதர் தீயினால் திறந்தவெளி திடலின் பெரும்பகுதி தீக்கிரையா னது. ஸ்டோம்ஃப் இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி, தரையிலிருந்து கொழுந்துவிட்டெரியும் தீயும் அதனால் சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்ட கரும் புகை மூட்டத்தையும் காட்டியது. மெராந்தி அவென்யூவில் தீ ஏற்பட்டது குறித்து குடிமைத் தற்காப்புப் படைக்கு நேற்று பிற்பகல் 2.40க்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் விட்டுவிட்டு பல இடங்களில் தீ பற்றியிருந்ததை அதிகாரிகள் அறிந்தனர். நான்கு காற்பந்தாட்டத்திடல் அளவு பகுதி தீயில் எரிந்தது. குடிமைத் தற்காப்புப் படையினர் தீயை அணைத்தனர். தீயினால் எவரும் காயமடையவில்லை. தீக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

மெராந்தி அவென்யூவில் பற்றியெரியும் புதர். படம்: ஸ்டோம்ஃப்