சிவப்பு உறைகளில் வைக்கப்பட் டிருந்த 5,000 வெள்ளி பணத்தைத் திருடிய இந்தோனீசிய பணிப் பெண்ணுக்கு நேற்று ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி தமது விடுமுறை நாளில் பூன் லே டிரைவில் உள்ள 90 வயது முதலாளியான சோ மெங் சிங்கின் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது இழுப்பறை பூட்டப்படாமல் இருப்பதை பணிப் பெண் அப்ரியானா கவனித்தார். வீட்டுக்குத் திரும்பிய அப் ரியானா இழுப்பறையில் இருந்த சிவப்பு உறைகளை எடுத்துக் கொண்டார்.
பின்னர் அவர் தனது உடமை களை எடுத்துக் கொண்டு பாத் தாம் செல்வதற்காக ஹார்பர் ஃபிரண்ட் படகு முனையத்துக்குச் சென்றார். சிவப்பு உறைகளில் இருந்த பணத்தில் வீடு திரும்புவதற்காக விமான டிக்கெட்டையும் அவர் வாங்கினார். சிவப்பு உறையில் எஞ்சியிருந்த பணத்தை அவர் வீட்டுக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொண்டார். திரு சோ இது குறித்து பிப்ரவரி 27ஆம் தேதி காவல் துறையிடம் புகார் அளித்தார். இதற்கிடையே சிங்கப்பூர் திரும்பிய அப்ரியானாவை போலி சார் கைது செய்தனர்.

