அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் புதன் அன்று பேருந்து மோதியதில் சைக் கிள் ஓட்டி ஒருவர் காயம் அடைந் தார். இதில் சுயநினைவுடன் இருந்த அவர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச்சம்பவம் குறித்து பிற்பகல் 2.49 மணியளவில் தகவல் வந்தது என்று காவல்துறையினர் தெரிவித் தனர். சம்பவத்தை நேரில் பார்த்த வாசகர் ஒருவர் விபத்து படங்களை (படம்) ஸ்டோம்ப் இணையத் தளத்தில் பதி வேற்றியிருந்தார். நடைபாதையில் 'ஓஃபோ' சைக் கிள்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் சைக் கிள் ஓட்டி சாலையைப் பயன்படுத்திய தாக என்று வாசகர் தெரிவித்தார்.
பேருந்து மோதி சைக்கிள் ஓட்டி காயம்
1 mins read
-

