கடந்த சில ஆண்டுகளாக சச்சரவு களை சுமூகமாகத் தீர்க்க உதவும் சட்ட நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சட்ட நிறுவனங் களை அனுபவமுள்ள வழக்கறி ஞர்கள் பலர் தொடங்குவதே இதற்கு காரணம். அண்மையில் வழக்கறிஞர் கே. அன்பரசனும் இந்தப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளார். 'விதர்ஸ் கத்தார் வோங்' எனும் நிறுவனத்தில் சச்சரவு களுக்கு சுமூகத் தீர்வு காணும் ஆசிய பிரிவின் வட்டாரத் தலை வராக திரு அன்பரசன் பணியாற்றி வந்தார்.
சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 31ஆம் தேதி அந்த வேலையைக் கைவிட்ட அவர், 'ஒயிட்ஃபெர்ன்' என்ற பெயரில் வர்த்தக, காப்புறுதி வழக்காடல், சச்சரவுகளுக்குத் தீர்வு காணும் சட்ட ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மூத்த வழக்கறிஞர்களான லோக் வி மிங், அஷோக் குமார் ஆகி யோரும் இதே பாதையில் இறங்கி யுள்ளனர். 2016 டிசம்பரில் 30 ஆண்டு களுக்குப் பிறகு 'டென்ட்டன்ஸ் ரோடைக்' என்ற சட்ட நிறுவனத் திலிருந்து விலகிய லோக், சச்சரவு களை சுமூகத் தீர்வு காணும் 'எல்விஎம்' எனும் சட்ட நிறு வனத்தைத் தொடங்கினார். தற்போது இந்த நிறுவனத்தில் 16 வழக்கறிஞர்கள் பணியாற்று கின்றனர்.
சச்சரவுகளுக்கு சுமூகத் தீர்வு காண உதவும் சட்ட நிறுவனத்தை அன்பரசன் தொடங்கியுள்ளார். படம்: அன்பரசன்

