லிம்: பல்லின சமுதாயத்திற்கு சமய விழாக்கள் முக்கியம்

லிம்: பல்லின சமுதாயத்திற்கு சமய விழாக்கள் முக்கியம்

1 mins read
cc134fcc-2997-49bd-9e17-68b76f072fcb
-
Google News Preferred Icon

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூர் ஒரு பல்லின சமுதா யமாக நிலைத்து நிற்க வெவ்வேறு இனத்தவர்கள் தொடர்ந்து தங் களது கலாசாரத்தைக் கட்டிக் காக்க உதவும் தனித்துவமிக்க சமய விழாக்களில் கலந்துகொள் வது முக்கியம் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே வலியு றுத்தினார். கடந்த செவ்வாய்கிழமை இரவு திரு லிம் கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் உள்ள ஸ்ரீ சிவன் கோயில் மகா சிவராத்திரி விழா வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

"இந்து சமயம் உலகின் ஆக தொன்மையான சமயங்களில் ஒன்று. சிங்கப்பூரில் பல்லின சமு தாயத்தினரும் ஒன்றாக வாழ் கின்றனர். இதுபோன்ற சமய விழாக்களைக் கொண்டாடுவதன் மூலம் அவரவர் கலாசாரம் தழைக்க உதவுகிறது," என்றார் அமைச்சர் லிம். குடும்பங்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திர ளாக வந்து 1,008 பால்குட அபி ஷேகத்திலும் இதர வழிபாடுகளி லும் பங்கேற்றனர்.

சிவராத்திரி விழாவில் (இடமிருந்து), ஸ்ரீ சிவன் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் திரு வெங்கடேஷ் நாராயணசுவாமி, மனிதவள அமைச்சர் திரு லிம் சுவீ சே, இந்து ஆலோசனை மன்ற தலைவர் திரு ராஜன் கிருஷ்ணன் ஆகியோர் பால்குடப் பிரார்த்தனை செய்கின்றனர். படம்: த.கவி