சீனப் புத்தாண்டு குதூகலத்தில் 'முயிஸ்' பங்கேற்பு

சீனப் புத்தாண்டு குதூகலத்தில் 'முயிஸ்' பங்கேற்பு

1 mins read
6fc5124a-e237-48d2-8fe3-346951431363
-
Google News Preferred Icon

ஆரஞ்சு பழங்களை விநியோகித் தல், கலங்களில் அடைக்கப்பட்ட பானங்கள், வாழ்த்துப் பதாகை களைத் தொங்கவிடுதல் போன் றவை மூலம் சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்களும் சீனப் புத் தாண்டுக் கொண்டாட்ட உணர் வைப் பரப்பி வருகின்றன. இந்த முயற்சிக்கு கடந்த ஆண்டு வித்திட்டவர் முஃப்தி எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமயத் தலைவர். இந்த முயற்சி மூலம் மலாய் சமூகம் சீன சமூ கத்துடன் நல்ல உறவை வளர்த்து கொள்வதுடன், எதிர்கால தலை முறைகளுக்காக அமைதியைக் கட்டிக்காக்கலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"அனைத்து சமய புரிந்துணர் வுக்கு சிங்கப்பூர் பள்ளிவாசல்கள் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது," என்று நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் முயிஸ் கூறியது. "வளமான கலாசார முக்கியத் துவத்தைப் பிரதிபலிக்கும் சீனப் புத்தாண்டு, சீன சமூகத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பல கலாசார சமூகத்துக்கும் ஏற்பு டைய பண்டிகை," என்று முயி ஸின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஜூ சியாட்டிலுள்ள காலிட் பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் தலைவர் ஹாஜி அலாவுதின் (நடுவில்) வர்த்தகர் ஒருவருக்கு ஆரஞ்சு பழங்கள் கொடுத்து வாழ்த்து சொல்கிறார். படம்: முயிஸ்