சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடைப்பட்ட ரயில் இணைப்பை கட்டுதல், நிர்வகித்தல் ஆகியவை தொடர்பான மசோதாவில் முக்கிய திருத்தம் ஒன்று பரிந்துரைக்கப்பட் டுள்ளது. இந்தத் திருத்தம் இரு திட்டங்களின் வர்த்தக நம்பகத் தன்மைக்கு ஆதரவளிக்கும். திருத்தங்களுடன் கூடிய எல்லை தாண்டிய ரயில் மசோதா நிறைவேற்றப்பட்டால், ரயில்வே சொத்துகளுக்கும் ரயில் சேவைக ளுக்கும் பொறுப்பு வகிக்கும் நடத் துநர்களுக்கு, தனியார் நிதி நிறுவ னங்களுடன் பேரம் பேச அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.
இந்த உத்தேச திருத்தத்துடன் மற்ற சில சிறிய திருத்தங்களும் தேர்வுக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு நவம்பரில் நாடாளு மன்றத்தில் இடம்பெற்ற மசோதா வின் இரண்டாம் வாசிப்புக்குப் பிறகு மசோதாவை மறுபரிசீலனை செய்ய தேர்வுக் குழு ஒன்று நிய மிக்கப்பட்டது.
எல்லை தாண்டிய ரயில்வே மசோதா, 2026ல் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப்படும் எதிர் கால சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டத்துக்கும் 2024ல் நிறைவுபெறும் என்று எதிர் பார்க்கப்படும் சிங்கப்பூர்-ஜோகூர் பெருவிரைவு இணைப்பு ரயில் திட்டத்துக்கும் ஆதரவு அளிக்கும். தற்போதைய மசோதா, ரயில்வே சொத்து மற்றும் ரயில் நடத்துநர் கள் இரு திட்டங்களிலும் மூன்றாம் தரப்புக்கு வர்த்தக குத்தகைகளை மாற்றிவிடுவதற்கு அனுமதிப்ப தில்லை.
அப்படி என்றால், ரயில் நடத்து நர்கள் சிங்கப்பூரும் மலேசியாவும் வழங்கும் குத்தகைகளைப் பயன் படுத்தி தனியார் நிதி உதவியைப் பெற முடியாது. நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் தலைமையிலான எட்டு பேர் கொண்ட தேர்வுக் குழு நேற்று முன்தினம் தனது அறிக் கையை நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்தது. அடுத்த கூட்டத்தில் அந்தத் திருத்தம் விவாதத்துக்கு வரும்.

