காரில் கடத்தப்பட்ட பறக்கும் அணில்கள்

1 mins read
1f720729-8a97-4436-b7ea-89b10d6cd00e
-

உட்லண்ட்ஸ் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத் தின் அதிகாரிகளுக்கு அன்பர் தினத்தன்று இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அன்று விடியற்காலை மேற் கொண்ட சோதனையில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அணில்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்த னர். மரங்களில் தாவித் தாவி பறக்கும் இரண்டு அணில்களும் ஒரு சிறிய பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அது மட்டுமல்லாமல் அதே காரில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த தீர்வை செலுத்தப்படாத 44 கார்ட்டன் சிகரெட் பெட்டி களையும் அதிகாரிகள் கைப் பற்றினர்.

இதில் தொடர்புடைய 25 வயது சிங்கப்பூரரான ஓட்டு நரும் இருபது வயது சிங்கப்பூர் பெண்ணும் சிங்கப்பூர் வேளாண்-உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்திடம் அனுப்பி வைக்கப்பட்டனர். தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளும் வாகனமும் மேல் விசாரணைக்காக சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப் படைக்கப்பட்டன.

காரில் மறைத்து கடத்தப்பட்ட அரிய வகை பறக்கும் அணிகள். ஐசிஏ ஃபேஸ்புக்