ஓய்வுபெற்ற மேஜர், ஹாக்கி வீரர் சுராஜனுக்குப் பிரியாவிடை

ஓய்வுபெற்ற மேஜர், ஹாக்கி வீரர் சுராஜனுக்குப் பிரியாவிடை

1 mins read
5fef4d62-4827-4fd6-8371-7ab997e3bb8d
-

முஹம்மது ஃபைரோஸ்

சிங்கப்பூர் ஹாக்கி அணியின் 'த டோன்' (The Don) என்று பெருமையாக அழைக்கப்பட்ட கங்காதரன் சுராஜனுக்கு மண்டாய் தகனச்சாலையில் சடங்குபூர்வ மரியாதையுடன் நேற்று பிரியா விடை அளிக்கப்பட்டது. நீண்டகாலமாக நோய்வாய்ப்பட் டிருந்த அவர், நோய் முற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை காலமா னார். அவருக்கு வயது 70. சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை களுக்காக அவருக்குச் சிறுநீரக சுத்திகரிப்புச் சிகிச்சை மேற் கொள்ளப்பட்டு வந்தது. திரு சுராஜனுக்கு இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுக்கும் விதமாக சிங்கப்பூரின் முன்னாள் ஹாக்கி வீரர்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு மண்டாய் தகனச்சாலையில் ஒன்றிணைந்தனர்.

கடந்த 1973 தென்கிழக்காசிய தீபகற்ப (சியப்) விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அணி மலேசிய அணியை 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்திய வரலாற்றுச் சாதனைக்கு வித்திட்டவர்களில் ஒருவரான திரு சுராஜனின் நல்லுடலுக்கு அணியின் துணைத் தலைவர் அருள் சுப்பிரமணியம் உட்பட அந்த அணியில் இடம்பெற்ற 10க்கும் மேற்பட்ட முன்னாள் ஹாக்கி வீரர்கள் ஹாக்கி மட்டைகளைக் கொண்டு நேற்றுச் சடங்குபூர்வ மரியாதை செலுத்தினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்