17 வயது இளையரின் பாலியல் வீடியோ பதிவுகளை சமூக ஊடகத்தில் பரப்பாமல் இருக்க தங்களுக்கு $2,000 வேண்டும் என்று மிரட்டி பணம் பறித்த 21 வயது சிங்கப்பூரர் நவீந்திரன் தேவதாஸ், 23 வயது சிங்கப்பூர் நிரந்தரவாசி நிதேஷ் நாயுடு ராஜ் மீது தலா ஒரு குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இம்மா தம் 14ஆம் தேதி விடுக்கப்பட்ட மிரட்டலுக்கு அஞ்சிய அந்த இளையர் கேட்கப்பட்ட பணத்தை இரண்டு நாட்களில் அவர்களிடம் வழங்கினார். நேற்று நீதிமன்றத் தில் அவர்கள்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
மிரட்டி பணம் பறித்த இருவர் மீது குற்றச்சாட்டு
1 mins read

