எம்ஆர்டி நிலையத்தில் உள்ள பணம் நிரப்பும் முகப்பு சேவை அடுத்த மாதம் முழுமையாக நீக்கப்படும். இதன் மூலம் பொதுப் போக்குவரத்துக்கு பயணிகள் ரொக்கம் பயன் படுத்தாமல் இருப்பதை ஊக்கு விக்கும் முறை வலுப்படுத்தப் படும். இந்த மாற்றத்தால், ரொக்கம் மூலம் தங்கள் பயண அட்டைகளில் பயணி கள் பணம் நிரப்ப எம்ஆர்டி நிலையத்தின் அதிகாரிகளை அவர்கள் சார்ந்திருக்க முடி யாது.
மாறாக, பயணிகள் பணம் நிரப்பும் இயந்திரங்களை மட் டுமே பயன்படுத்தி தங்கள் பயண அட்டைகளில் பணத்தை நிரப்பிக் கொள்ள வேண்டியிருக்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் முதலே பல எம்ஆர்டி நிலை யங்களில் இந்த முறை அறிமு கப்படுத்தப்பட்டு விட்டது. இதுவரை, ஆர்ச்சர்ட், சாமர்சட், ராஃபிள்ஸ் பிளேஸ், பூகிஸ், அல்ஜுனிட் உட்பட மொத்தம் 89 நிலையங்களில் அதிகாரி கள் மூலம் பணம் நிரப்பும் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. சைனாடவுன், யூனோஸ், தெம்பனிஸ், ஜாலான் புசார் உட்பட எஞ்சியுள்ள 25 நிலை யங்களில் அடுத்த மாதம் 21ம் தேதியிலிருந்து இச்சேவை நிறுத்தப்படும்.

