உட்லண்ட்ஸ் அவென்யூ 2, உட்லண்ட்ஸ் அவென்யூ 5 சந்திப்பில் நேற்றுக் காலை டாக்சி ஒன்று தீப்பற்றியது. டாக்சியின் ஓட்டுநர் காயங்கள் ஏது மின்றி தப்பினார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு இது குறித்த தகவல் காலை 9 மணியளவில் கிடைத்தது. 'எஸ்ஜிரோட் புளோக்ஸ்/ டிராஃபிக் நியூஸ்' காணொளியில் சில்வெர்கேப் நிறுவன டாக்சி ஒன்றின் முன்பகுதி தீயில் கொழுந்துவிட்டு எரிவது தெரிந்தது. தீப்பற்றுவதற்கு முன்பாக டாக்சியின் ஓட்டுநர் அதில் இருந்து வெளியேறிவிட்டார். தீயை குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
உட்லண்ட்ஸில் கொழுந்துவிட்டு எரிந்த டாக்சி
1 mins read
-

