நான்காவது மாடியிலிருந்து பொருட்களை வீசிய ஆடவர் கைது

நான்காவது மாடியிலிருந்து பொருட்களை வீசிய ஆடவர் கைது

1 mins read
c8565085-5b6d-47c7-933e-ccc2cd22410e
-

தனது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிலிருந்து பொருட்களை ஒன் றன் பின் ஒன்றாக வீசி எறிந்த 57 வயது ஆடவரை போலிசார் கைது செய்துள்ளனர். அப்பர் பூன் கெங் ரோடு, புளோக் 15ல் உள்ள தனது வீட்டின் பின்புற சன்னலிலிருந்து அவர் சாயங்கள் உள்ள கலன்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன் றவற்றை கீழே வீசினார். இச்சம்பவம் தொடர்பில் தங்க ளுக்கு நேற்றுக் காலை 10.20 மணிக்கு தகவல் கிடைத்தது என்று போலிஸ் தெரிவித்தது. "தனது வீட்டிலிருந்து ஆடவர் ஒருவர் சாயங்கள் உள்ள கலன் கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை வீசியெறிந்தார். இதில் எவருக்கும் காயம் ஏற்பட வில்லை," என்று போலிஸ் கூறி யது.

மனநலச் சுகாதாரச் சட்டத்தின் அடிப்படையில், கண்மூடித்தனமாக செயல்பட்ட குற்றத்தின் பேரில் அந்த ஆடவர் கைது செய்யப்பட் டார். அவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார் என்று அறியப் படுகிறது. மேலே இருந்து வீசப்பட்ட சாயத்தால் குறைந்தது இரண்டு கார்களுக்கு சேதம் ஏற்பட்டது.

நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து வீசப்பட்ட சாயத்தால் குறைந்தது இரண்டு கார்களுக்கு சேதம் ஏற்பட்டது. படம்: ‌ஷின்மின்