சிறிய நிறுவனங்கள் நிதி உத வியை எளிதாகப் பெறும் வகையில் புதிய மானியத் திட்டம் அறிவிக்கப் பட்டு இருக்கிறது. இத்தகைய நிறுவனங்கள், புத் தாக்கத்தைப் பரந்த அளவில் பேணி வளர்க்க ஏதுவாக அந்த மானியம் இடம்பெறுகிறது என்று நிதி அமைச்சர் ஹெங் நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தங்களுக்குத் தோதான தொழில் நுட்பங்களைக் கைகொள்ள முய லும் சிறிய, நடுத்தர நிறுவனங் களுக்கு ஆகும் செலவில் 70% வரை நிதி அளிக் கக்கூடிய புதிய 'உற்பத்தித்திறன் தீர்வுகள் மானி யம்' என்ற புதிய திட்டம் நடை முறைக்கு வரும்.
"மாற்றங்கள் வேகமாக இடம் பெற்று வருகின்றன. போட்டித்திறன் அதிகரித்து வருகிறது. இச்சூழ் நிலையில் நம்முடைய பொருளியல் முழுவதும் பரந்த அளவில் புத் தாக்கம் இடம்பெற வேண்டும்," என்றார் அமைச்சர். புதிய மானியம் வரும் ஏப்ரல் முதல் நடப்புக்கு வருகிறது. இந்த ஆண்டில் காலாவதியாகும் 'உற் பத்தி மற்றும் புத்தாக்க நிதிப்பற்றுத் திட்டத்திற்குப்' பதிலாக இந்தத் திட்டம் இடம்பெறுகிறது.

