2020ஆம் ஆண்டு முதல் கரிம வரி அறிமுகம்

2020ஆம் ஆண்டு முதல் கரிம வரி அறிமுகம்

1 mins read

சிங்கப்பூரில் ஆண்டு ஒன்றுக்கு 25,000 டன் அல்லது அதற்கும் அதிக கரியமிலவாயுவை வெளி யேற்றும் எல்லா அமைப்புகளும் 2020 முதல் கரிம வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று நிதி அமைச்சர் ஹெங் நேற்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்தார். அந்த வரி, 2019 முதல் 2023 வரை வெளியேற்றப்படும் ஒவ் வொரு டன் கரியமிலவாயுவுக்கும் $5 ஆக தொடக்கத்தில் நிர்ணயிக் கப்படும். கரிம வரியை அரசாங்கம் 2023ல் மறுபரிசீலனை செய்யும். அதை 2030வது ஆண்டு வாக்கில் ஒரு டன் கரியமிலவாயுவுக்கு $10 முதல் $15 ஆக அதிகரிக்கலாம் என்று அரசாங்கம் திட்டமிடுகிறது. கரிம வரி மூலம் முதல் ஐந் தாண்டுகளில் ஏறக்குறைய $1 பில்லியன் தொகை வருவாய் கிடைக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இருந்தாலும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பயனுள்ள திட்டங் களில் அந்தத் தொகையைவிட அதிகமாகச் செலவிட அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.