சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மேம்பட பல்நோக்கு உதவிகள்

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மேம்பட பல்நோக்கு உதவிகள்

1 mins read
127a0706-22a2-4a25-8a47-948970af8989
-

சிங்கப்பூரில் சிறிய, நடுத்தர நிறு வனங்கள் புதிய யுகத்திற்கு மாறிக்கொள்ளவும் வட்டார, அனைத்துலக ரீதியில் விரிவடை யவும் மின்னிலக்கம், புத்தாக்கம் போட்டித்திறனுடன் திகழவும் உதவக்கூடிய பல திட்டங்களை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று புதிய வரவுசெலவுத் திட் டத்தில் அறிவித்தார். இத்தகைய நிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் எதிர் நோக்கும் சவால்களைச் சமாளிக் கவும், அனைத்துலகமயமாகவும், மனித ஆற்றலை பலப்படுத்திக் கொள்ளவும், மற்ற நிறுவனங்க ளுடன் சேர்ந்து வளங்களைப் பகிர்ந்துகொண்டு சிறந்த வாய்ப்பு களைப் பெறவும், புத்தாக்கங்க ளைத் தழுவிக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி புதிய பொருட்களைத் தயாரித்து புதிய சேவைகளைக் கண்டு பிடித்து அவற்றை வர்த்தக ரீதி யில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தவும், ஆய்வுகளில் ஈடுபட்டு புதிய வழி போட்டித்திறன் அனுகூலத்தைப் பெறவும் ஏராளமான திட்டங்கள் வரவுசெலவுத் திட்டத் தில் இடம்பெற்று இருக்கின்றன.