உள்கட்டமைப்பு முதலீட்டு சவால்களை சமாளிக்க சேமிப்பு, கடன்

உள்கட்டமைப்பு முதலீட்டு சவால்களை சமாளிக்க சேமிப்பு, கடன்

1 mins read
a96aa201-9403-43c3-b2db-55c13bef9940
-

சிங்கப்பூரில் வரும் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய உள்கட்டமைப்பு முதலீட்டு சவால்களை இரண்டு வழிகளில் சமாளிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது. அவற்றில் ஒன்று சேமிப்பு. மற்றொன்று கடன் வாங்குவது. முக்கியமான ரயில் வழித்தடங்க ளுக்காக புதிதாக $5 பில்லியன் நிதி வழங்கப்படும். வாரியங்களும் அரசாங்கத்திற் குச் சொந்தமான நிறுவனங்களும் கடன் வாங்குவதற்கான வழிகள் ஆராயப்படும் என்று நிதி அமைச் சர் ஹெங் சுவீ கியட் நேற்று நாடா ளுமன்றத்தில் தெரிவித்தார். குறிப்பிட்ட செலவினங்களால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பல ஆண்டுகளுக்குப் பிறகே உணர முடியும் என்பதை அமைச்சர் சுட் டிக் காட்டினார்.