மாடியிலிருந்து பொருளை வீசிய இளையர் கைது

1 mins read
4adeb323-07e7-4679-8f63-d56b344da4e9
-

வீவக புளோக்கின் மாடியிலிருந்து சாலைத் தடுப்பை வீசி எறிந்த பதின்ம வயதினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள் ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு தெம்பனிஸ் ஸ்திரீட் 82ல் உள்ள புளோக் 856ல் உள்ள மாடியி லிருந்து சாலைத் தடுப்பு வீசப் பட்டதாக நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் புகார் வந் துள்ளதை உறுதி செய்த காவல் துறையினர், முன்யோசனையின்றி செயல்பட்டதற்காக 19 வயது இளையர் கைது செய்யப்பட்டதாகக் கூறினர். இவரது செயலை படம் பிடித்த மற்றொரு இளையர் இன்ஸ்ட்டாகி ராமில் பதிவேற்றியதால் ஃபேஸ்புக் வழியாகப் பரவி பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்தது. படிக்கட்டில் நின்றுகொண் டிருக்கும் இளையர் சிரித்துக் கொண்டே சாலைத் தடுப்பை வெளியே வீசி எறிவதைக் காணொளி காட்டியது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நம்பப் படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.