பாலியல் உறவு; மூன்று கட்டுமான ஊழியர்களுக்கு சிறைத் தண்டனை

பாலியல் உறவு; மூன்று கட்டுமான ஊழியர்களுக்கு சிறைத் தண்டனை

1 mins read

வயது குறைந்த மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட மூன்று கட்டுமான ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 2016 மே 2ஆம் தேதியன்று 13 வயது மாணவியுடன் கில் குர்ஜந்த் சிங், 25, சுர்ஜீத் சிங், 29 ஆகியோர் அதே நாளில் சில மணி நேர இடைவெளியில் பாலியல் உறவில் ஈடுபட்டனர். இவர்கள் இருவருக்கும் 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது நபரான ஜுக்ராஜ் சிங், 33, அதே பெண்ணிடம் முறை தவறி நடந்துகொண் டதற்காக எட்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மே 1ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் நண்பர்களோடு சுற்றிக் கொண்டிருந்த மாணவியை சுர்ஜித்தும் குர்ஜந்த்தும் முதல் முறையாகச் சந்தித்தாகக் கூறப்பட்டது.