விபத்தினால் விரைவுச் சாலையில் நெரிசல்

விபத்தினால் விரைவுச் சாலையில் நெரிசல்

1 mins read
7b294c9a-cdf6-4091-86d7-d3f14f9b24f4
-
Google News Preferred Icon

அனைத்துத் தீவு விரைவுச் சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த விபத்து காரணமாக உச்ச நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தது இரண்டு வாகனங்கள் சிக்கி யிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்த மாலிக்கி என்பவர், தாம் காரில் சென்றுகொண்டிருந்தபோது பாய லேபார், யூனோசுக்கு வெளியேறும் சாலைக்கு இடையே விபத்து நிகழ்ந்ததாகக் கூறினார். அப்போது சாங்கி விமான நிலையத்தை நோக்கி தீவு விரைவுச் சாலையில் தாம் காரில் பயணம் செய்து கொண்டிருந்த தாகவும் அவர் தெரிவித்தார். இந்த விபத்தினால் மாலை 6.20 மணியளவில் சாலையின் தடம் 1, தடம் 3 மூடப்பட்டது. விபத்தில் இரண்டு முதல் மூன்று வாகனங்கள் சிக்கியிருக் கலாம் என்று 26 வயது லாரி ஓட்டுநர் ஒருவர் தெரிவித்தார்.

விபத்தில் அப்பளமாக நொறுங்கிய கார். படம்: மாலிக்கி