உணவு நிலையத்தை விற்க நீதிமன்றம் தடை

உணவு நிலையத்தை விற்க நீதிமன்றம் தடை

1 mins read
41c1beb9-1834-4a0c-8083-dc0d159f9d1d
-

பியூட்டி வேர்ல்ட் உணவு நிலைய விற்பனையை உயர்நீதிமன்றம் தடுத்து நிறுத்திவிட்டது. அந்த உணவு நிலையத்தை 17.5 மில்லியன் வெள்ளிக்கு விற்க அதன் அறங்காவலர் குழு வினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இது ஏற்புடைய விலையல்ல என்று கூறிய உயர் நீதிமன்றம், விற்பனைக்கு அனு மதி வழங்க மறுத்துவிட்டது. முன்னதாக பியூட்டி வேர்ல்ட் உணவு நிலையத்தை 17.5 மில்லியன் வெள்ளிக்கு விற்க தங்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்று அறங்காவலர் குழுவைச் சேர்ந்த மூவர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதனை உயர்நீதிமன்றம் தள் ளுபடி செய்துவிட்டதால் பியூட்டி வேர்ல்ட் உணவு நிலைய விற் பனை பாதிக்கப்பட்டுள்ளது. "சொத்தின் விலையை மதிப் பிடுவதற்கு முன்பாகவே சொத்தை வாங்க வந்தவரிடம் அந்தச் சொத்தை வாங்குவதற் கான ஒப்பந்தம் போடப்பட்டுள் ளது," என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.

பியூட்டி வேர்ல்ட் உணவு நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதி ராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்