மறதி நோய்த் தடுப்புத் திட்டம் மேலும் பல சமூக நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படுவதால் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட சுமார் 2,000 பேர் பலனடைவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நினைவாற்றல் விழிப்புணர்வு, பயிற்சி போன்றவற்றை உள்ளடக் கிய 'த ஏஜ் வெல் எவ்ரிடே' திட்டம் 2023ஆம் ஆண்டுவாக்கில் நாற்பது சமூக நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும். தற்போது ஒன்பது சமூக நிலையங்களில் இத்திட்டம் மேற் கொள்ளப்படுகிறது. மறதி நோய் தடுப்புத் திட்டத் தின் கீழ் மறதி நோய் ஆபத்தை எதிர்நோக்குபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இசை, கலைப் பயிற்சி, இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தோட்ட வேலை போன்றவை அவற்றில் அடங்கும். சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் நினைவாற்றல்-அறி வியல் நிலையத்தின் மறதி நோய் தடுப்புத் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. அப்போது முதல் இதுவரை 1,300க்கும் மேற்பட்ட மூத்த குடி மக்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர். அறுபது வயதுக்கு மேற்பட்டவர் களில் பத்து விழுக்காட்டினரை மறதி நோய் பாதிக்கிறது.
மறதி நோயால் பாதிக்கக்கூடியவர்களுக்கு நினைவாற்றலைப் பெருக்கும் வகையில் ஓவியம், இசை, சமையல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

