ஜிஎஸ்டி தாமதமாக உயர்த்தப்பட்டாலும் நாணய கொள்கை மாற்றப்படலாம்

ஜிஎஸ்டி தாமதமாக உயர்த்தப்பட்டாலும் நாணய கொள்கை மாற்றப்படலாம்

1 mins read

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) உயர்வை அரசாங்கம் தாமதமாக செயல்படுத்தவிருக்கிறது என்றா லும் சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் நாணய கொள்கையை மாற்றும் சாத்தியம் தொடர்ந்து இருப்பதாக பொருளியல் ஆய்வா ளர்கள் கருதுகின்றனர். சிங்கப்பூர் நாணய பரிவர்த் தனை விகித நிர்ணயக் கொள்கை அளவை ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் நாணய ஆணையம் 50 புள்ளிகள் உயர்த்தும் என்ற எதிர் பார்ப்பைத் தொடர்ந்து கொண் டுள்ளதாக ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அதன் அறிக்கையில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

வரவுசெலவுத் திட்டம் பொருளி யலுக்குச் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் ஆணையம் ஏப்ரலில் நடக்கும் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு அதன் நடுநிலையான கொள்கை நிலையிலிருந்து விலகி அதன் நாணய மதிப்பை 0.5 விழுக்காடு உயர்வு காண வைக்கும் என்று 'பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச்' கூறியுள்ளது. இதற்கிடையில், அரசாங்கத் தின் தற்போதைய கொள்கையின் படி ஆணையம் தொடர்ந்து நடுநிலையான கொள்கையைக் கடைப்பிடிக்கும் என்று 'ஐஎன்ஜி ஏசியா' பொருளியலாளர் பிரகாஷ் சக்பால் கூறியுள்ளார்.