புதிய உணவு பங்கீட்டுத் திட்டம் ஒன்றை அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று சிராங்கூனில் தொடங்கிவைத்தார். சிராங்கூன் 'மோரல்' குடும்பநல சேவை நிலையத்துக்கு நேற்று வருகையளித்தார் அதிபர். இந்தத் திட்டத்தின் கீழ், அடுக்குமாடியின் கீழ்த் தளத்தில் வைக்கப்படும் தட்டுகளில் டின்களின் அடைக்கப்பட்ட உணவுகள், பிஸ்கட் போன்ற உணவுகளை வைக்க குடியிருப்பாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். குடும்ப சேவை நிலையத்தின் ஊழியர்கள் இவற்றை அக்கம்பக்கத்தில் வசிக்கும் ஏறக்குறைய 100 வசதி குறைந்த குடும்பங்களுக்கு விநியோகிப்பார்கள். நிலையத்தில் முதியோருக்கு மாண்டரின் ஆரஞ்சுகளை வழங்கி புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார். சிறார்களுடன் அளவளாவி மகிழ்ந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உணவுப் பங்கீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த அதிபர் ஹலிமா
1 mins read
-

