நீரவ் மோடி: என்னால் கடனைத் திருப்பி அடைக்க முடியாது

நீரவ் மோடி: என்னால் கடனைத் திருப்பி அடைக்க முடியாது

2 mins read

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி கொடுத்த தவறான புகாரால் எங்கள் நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டன. இதனால் வங்கியில் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடி யாத நிலையில் உள்ளேன் என்று வைர வியாபாரியும் கோடீஸ்வரரு மான நீரவ் மோடி கூறியுள்ளார். வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கடனாக வாங்கி, அதை திருப்பிச் செலுத் தாமல் ஏமாற்றிவிட்டதாக கூறப் படும் குற்றச்சாட்டை நீரவ் மோடி முதல்முறையாக தன் வாய் திறந்து மறுத்துள்ளார். "ரூ.5,000 கோடிக்கும் குறை வாகத்தான் நான் வங்கியில் கடன் பெற்றேனே தவிர, ரூ.11,000 கோடி அளவில் நான் வங்கியில் கடன் பெறவில்லை. "இந்தக் கடன் விவகாரத்தை வங்கி அவசரமாக வெளிப்படுத்தி புகார் அளித்ததன் மூலம் எனது நிறுவனத்தின் பெயர் கெட்டுவிட் டது.

என்னிடம் இருந்து கடனை முறையாகத் திரும்பப் பெறுவதற் கான அனைத்து வழிகளையும் வங்கியே அடைத்துவிட்டது. "ஊடகங்கள் எனது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இதனால் எனது வர்த்தக நிறு வனத்தின் பங்குகள் அனைத்தும் முடங்கிவிட்டன. "வங்கியில் பெறப்பட்ட கடன் தொகைக்கு குறிப்பிட்ட சொத்து களை அடமானம் வைத்துள் ளோம். எனது சொத்துகளின் மதிப்பு ரூ.6,500 கோடி. அவற்றை விற்பனை செய்தால்கூட வங்கிக்கு நான் செலுத்தவேண்டிய கடனை அடைத்துவிட முடியும். ஆனால், இப்போது அதற்கான காலம் கடந்துவிட்டதால் வங்கிக்குத் திரும்ப பணம் செலுத்த இயலாத நிலையில் உள்ளோம். "தற்போதுள்ள சூழ்நிலையில், எனது சொத்துகள் அனைத்தையும் விற்றால்கூட பஞ்சாப் நேஷனல் வங்கி குறிப்பிட்டிருக்கும் கடன் தொகையை அடைக்கமுடியாது," என்று வெளிநாட்டிலிருந்து பஞ்சாப் நேஷனல் வங்கி நிர் வாகத்துக்கு நீரவ் மோடி கடிதம் எழுதியுள்ளார்.