சிங்கப்பூரில் 'கூகள் பே' அறிமுகமாகிறது

சிங்கப்பூரில் 'கூகள் பே' அறிமுகமாகிறது

1 mins read

கூகள் நிறுவனம் அதன் மின்னி யல் பணப்பட்டுவாடா முறையைப் புதுப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. 'கூகள் பே' என்ற ழைக் கப்படும் அந்தப் பணப்பட்டுவாடா முறை சிங்கப்பூரில் இன்னும் சில வாரங்களில் அறிமுகமாக உள் ளது. கூகள் நிறுவனத்தின் மின்னியல் பணப் பட்டுவாடா பிரிவின் தென் கிழக்கு ஆசிய பசிபிக் நாடுகளுக்கான தலைவர் திரு சென் வே சியூ கூறுகையில், "இந்த மின்னியல் பணப்பட்டு வாடா முறைக்கு பயனீட்டாளர்கள் ஆண்ட்ராய்ட் மற்றும் எந்தவொரு இயக்க மென்பொருளிலும் ஆன கருவிகளையும் பயன்படுத்தலாம் என்றார். கை த் தொ லை பே சி க ளி ல் தற்போதுள்ள கூகள் வாலட் என்னும் செயலி இன்னும் சில வாரங்களில் புதிய செயலிக்கு மேம்படுத்தப்படும் என் றும் அவர் தெரிவித்தார். அந்தக் கருவிகளில் பழைய செயலியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடப்பு பணப்பட்டுவாடா தரவு கள் புதிய செயலிக்கு மாறிக் கொள்ளும் என்றும் அவர் விளக்கினார்.