அபுதாபியில் அறிவார்ந்த பயனீட் டுத் தீர்வுகளை முன்னோட்டமாக அறிமுகப்படுத்தவும், மின்சக்தி, தண்ணீர் ஆகிய இரண்டுக்குமான ஆற்றலை வளர்க்கவும் ஒன்பது சிங்கப்பூர் அமைப்புகள் அபுதாபி எரிசக்தித் துறையுடன் ஒப்பந்தங் களில் கையெழுத்திட்டிருப்பதாக சிங்கப்பூர் அனைத்துலகத் தொழில் நடவடிக்கை வாரியமும் பொதுப் பயனீட்டுக் கழகமும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
செயற்கை நுண்ணறிவு நிறு வனம் அடோ ஏஐ, அறிவார்ந்த எரிசக்தி தீர்வுகள் வழங்கும் டைமண்ட் எனர்ஜி நிறுவனம், மின் சார மொத்த விற்பனைச் சந்தையை இயக்கும் எனர்ஜி மார்க்கெட் கம்பெனி, மெயின்ஹார்ட் பொறியியல் ஆலோசனை நிறுவனம் ஆகியன இவற்றுள் அடங்கும். சிங்கப்பூரின் பொதுப் பயனீட் டுக் கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம், எஸ்பி குரூப் நிறுவனம், ஸ்வீக் அனலிட்டிக்ஸ் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவை கையெழுத் திட்ட மற்ற அமைப்புகள்.

