தற்காப்பு அமைச்சு கணினி கட்டமைப்பில் ஊடுருவல்; 35 குறைபாடுகள் கண்டுபிடிப்பு

தற்காப்பு அமைச்சு கணினி கட்டமைப்பில் ஊடுருவல்; 35 குறைபாடுகள் கண்டுபிடிப்பு

1 mins read
8c419128-82e2-4bab-bdef-7f53b6d59d3f
-
Google News Preferred Icon

தற்காப்பு அமைச்சு இவ்வாண்டின் முற்பகுதியில் தனது கணினி கட்டமைப்புகளில் ஊடுருவ அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று ஊடுருவிய கணினி வல்லு நர்கள், அமைச்சின் கணினிக் கட்டமைப்பில் 35 குறைபாடுகள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் இரண்டு குறை பாடுகள் மிக ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டது. ஆனால் இந்தக் குறைபாடு உடனடியாக நிவர்த்தி செய்யப் பட்டது. இந்த மோசமான குறை பாடுகளை எவராவது தவறான காரியத்திற்குப் பயன்படுத்தி யிருந்தால் அமைச்சின் இணையப் பக்கம் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது தேசிய சேவையாளர்களின் பெயர்கள் கசிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. தேசிய சேவை இணையத் தளத்தில் இரண்டு கணினிக் குறைபாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. கணினி ஊடுருவல் திட்டத்தில் பங்கேற்ற 264 பேருக்கு 14,750 யுஎஸ் டாலர் (S$19,480) வழங்கப்பட்டது.

தற்காப்பு அமைச்சின் கணினிக் கட்டமைப்புகளில் இருக்கும் ஒன்பது குறைபாடுகளையும் ஆபத்துகளையும் கண்டறிந்த 30 வயது டேரல். இவருக்கு ஊக்குவிப்புத் தொகையாக US$5,000 வழங்கப்பட்டது. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு மேலாளராகப் பணிபுரிகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்