மன உளைச்சலால் பாதிப்பு என ஃபெராரி பெண் ஓட்டுநர் புகார்

மன உளைச்சலால் பாதிப்பு என ஃபெராரி பெண் ஓட்டுநர் புகார்

1 mins read
f1ab6990-5256-4001-8bd5-1d0b344e9d78
-

வாகனமோட்டி ஒருவரின் முகத்தில் குத்திய ஃபெராரி காரின் பெண் ஓட்டுநரை சிறைக்கு அனுப்பினால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு மிக மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று அவரது மனநோய் மருத்துவர் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2014 பிப்ரவரி 25ஆம் தேதி தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் 39 வயது சோங் யென் பிங் என்பவருடன் வாக்குவாதம் ஏற்பட்டபோது அவரது முகத்தில் 72 வயது பெண் ஓட்டுநர் ‌ஷி கா யீ (படம்) குத்தினார்.

இதன் தொடர்பில் இரண்டு நாள் நடைபெற்ற வழக்கு விசாரணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி ‌ஷி கா யீ குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அப்போது அவருக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் மனநோயால் பாதிக்கப்பட்டவரா என்பதை நிர்ணயிக்கும் விசாரணை நேற்று நடைபெற்றது. நீதிமன்றத்தில் நேற்று சாட்சியம் அளித்த மவுண்ட் எலிசபெத் மருத்துவ நிலையத்தின் உளவியல் நிபுணர் டாக்டர் பாலின் சிம் லி பிங், "2009ல் மன உளைச்சலால் திருமதி ‌ஷி பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது," என்றார். இதனால் எதிர்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் திருமதி ‌ஷி செயல்பட்டிருக்கலாம் என்று அவர் கூறினார். இந்த வழக்கு இன்றும் தொடர்கிறது.