பொருள் சேவை வரியை உயர்த்து வது என்பது ஒரு சிரமமான முடிவு. ஆனால் சிங்கப்பூரின் வருமானத்தைப் பெருக்குவதற்கு இதுவே சிறந்த வழி என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். கடந்த ஆண்டில் சாத்தியமான அனைத்து மாற்று வாய்ப்புகளையும் அரசு முழுமையாக ஆராய்ந்தது என்றார் அவர். "எங்களால் மாற்றக்கூடிய பல்வேறு வரி விதிப்புகளை ஆராய்ந்தோம். வரியற்ற முறை களையும் ஆராய்ந்தோம். ஒவ் வொன்றிலும் சாதக, பாதகமான அம்சங்கள் இருந்தன.
அதன் பிறகே தற்போதைய சூழலில் பொருள் சேவை வரியை உயர்த்துவது ஏற்புடையதாக இருக்கும் என்று முடிவு செய் தோம்," என்றும் திரு ஹெங் கூறினார். ஜிஎஸ்டி உயர்வுக்குப் பதிலாக அரசு ஆராய்ந்த இதர சில வாய்ப்பு களையும் அமைச்சர் விளக்கினார். உதாரணமாக, வர்த்தக வரி உயர்த்தப்பட்டால் எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம் என்றார்.
சிங்கப்பூரிலிருந்து வர்த்தக நிறுவனங்கள் வெளியேறுவதும் அத்தகைய விளைவுகளில் ஒன்று. நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த மறுநாள் அமைச்சர் ஹெங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருந் தார். சிங்கப்பூரின் நீண்டகால சவால்களையும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் அவர் பேசினார்.

