குறைவான ஊழல் உள்ள நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் ஆறாவது இடம்

குறைவான ஊழல் உள்ள நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் ஆறாவது இடம்

1 mins read
Google News Preferred Icon

குறைவான ஊழல் உள்ள நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் ஆறாவது இடத்தில் இருக்கிறது. ஊழல் கண்காணிப்புக் குழுவான டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷ னலின் கடந்த ஆண்டுக்கான ஊழல் குறியீட்டில் சிங்கப்பூர் 84 புள்ளிகளைத் தக்கவைத்துள்ளது. அதற்கு முந்திய ஆண்டிலும் சிங்கப்பூர் 84 புள்ளிகள் பெற்றிருந்தது. இருப்பினும், இம்முறை பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆறாவது இடத்தில் சுவீடனும் உள்ளது. பட்டியலில் மொத்தம் 180 நாடுகள் உள்ளன.

துரிதமான, நேர்மையான பொதுச் சேவைக்கு உலகளாவிய நிலையில் சிங்கப்பூர் பிரபலமான நாடு என்றும் சிங்கப்பூரின் பொதுச் சேவைகளில் ஊழல் இருப்பது தொடர்ந்து மிகவும் குறைவாக உள்ளதாகவும் லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் வோங் ஹோங் குவான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டிருந்தார். சிங்கப்பூரில் ஊழல் விவகாரங்கள் கட்டுக்குள் இருப்ப தாகவும் அறிக்கையில் தெரி விக்கப்பட்டது. ஆசியாவிலேயே சிங்கப்பூர் தான் ஆகக் குறைந்த ஊழல் உள்ள நாடு என்று தெரிவிக்கப் பட்டது. 1995ஆம் ஆண்டிலிலிருந்து சிங்கப்பூர் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.