அந்தரங்கப் பாதுகாப்பு, வசதிகள் விரிவாக்கம்

அந்தரங்கப் பாதுகாப்பு, வசதிகள் விரிவாக்கம்

1 mins read
bb7edc6a-5879-4968-a2ca-5845b3c17159
-

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களுக்குக் கூடுதல் உதவிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பற்றி பாதிக்கப்பட்ட பெண்கள் எளிதில் புகார் செய்ய லாம். பாதிக்கப்பட்ட பெண்களின் அந்தரங்கத்தைப் பாதுகாக்கவும் அவர்களது வசதியை உறுதி செய்யவும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 1ஆம் தேதி யிலிருந்து ஒரே கூரையின்கீழ் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தடயவியல் சோதனை மையத்தில் பாலியில் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களுக்கு உதவி செய்ய மூன்று மருத்துவ மனைகளிலிருந்து மருத்துவர்கள் தயார்நிலையில் இருப்பர்.

பாதிக்கப்பட்ட பெண்களை மையத்தில் இருக்கும் மருத்து வர்கள் பரிசோதிப்பர். அதே சமயத்தில் பாலியல் பலாத்காரம் தொடர்பாக அப்பெண்கள் அங்கேயே போலிசிடம் புகார் செய்யலாம். இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டபோது சிங்கப்பூர் பொது மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமே மையத்தில் இருந்தனர். இனி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, கேகே மகளிர், சிறார் மருத்துவமனை ஆகிய வற்றைச் சேர்ந்த மருத்துவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

ஒரே கூரையின்கீழ் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தடயவியல் மையத்தைப் பார்வையிடும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்