விளக்குக் கம்பத்தில் மோதியதில் தலைகீழாக புரண்ட கார்

விளக்குக் கம்பத்தில் மோதியதில் தலைகீழாக புரண்ட கார்

1 mins read
fe273ac6-fedb-484e-b18b-7ee059a0af6e
-

ஆயர் ராஜாவில் மீடியாகார்ப் வளாகத்திற்கு அருகில் விளக்குக் கம்பத்தில் மோதிய கார் தலைகீழாக புரண்டது. நேற்றுக் காலை நடந்த அந்த விபத்தில் 49 வயது ஆடவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. ஒன்=நார்த் அவென்யூ, ஆயர் ராஜா கிரசெண்ட் சாலைச் சந்திப்பில் விபத்து ஏற்பட்டுள்ளதாக நேற்றுக் காலை சுமார் 7.30 மணிக்கு போலிசாருக்குத் தகவல் கிடைத்தது. காயமடைந்த ஆடவர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.

தலைகீழாக கிடந்த காரில் இருந்த ஆடவர் காயங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். படம்: வான் பாவ்