உணவு கடைக்காரர்களுக்கான புதிய ஊக்குவிப்புத் திட்டம்

உணவு கடைக்காரர்களுக்கான புதிய ஊக்குவிப்புத் திட்டம்

1 mins read
8a8764a0-ace5-434b-8b9d-496d3329d4e4
-
Google News Preferred Icon

உணவுக் கடை நடத்திய அனுபவம் இல்லாதவர்களுக்கு குறைந்த செலவில் அந்தத் தொழிலில் ஈடுபட்டு தங்களுக்கு விருப்பம் உள்ளதா என்பதை அறிந்துகொள் வதற்கு புதிய வாய்ப்புள்ளது. 'இன்குபேஷன் ஸ்டால்' திட்டம் எனும் உணவுக் கடைக்காரர்களை ஊக்குவிக்கும் திட்டம் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட் டுள்ளது.

ஆறு மாதங்களுக்கு சாதாரண கட்டணத்தில் பாதி விலைக்கு வாடகை செலுத்தினால் போதும். மேலும் குளிர்பதனப் பெட்டி, மேசை போன்ற கடைக்குத் தேவை யான தளவாடங்களும் பொருத்தப் பட்டு வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 13 உணவுக் கடைகளில் மூன்று கடைகள் செயல்பாட்டில் உள்ளன. மற்ற 10 கடைகளும் 'ஏபிசி பிரிக்வோர்க்ஸ்', தஞ்சோங் பகார் பிளாசா சந்தை, சைனாடவுன் காம்பிளக்ஸ், தேக்கா நிலையம், 'அப்பர் பூன் கெங்', 163 புக்கிட் மேரா செண்ட்ரல்' ஆகிய ஆறு உணவங்காடி நிலையங்களில் உள்ளன.

'ஏபிசி பிரிக்வோர்க்ஸ்' உணவங்காடியில் இந்தப் புதிய திட்டம் மூலம் கடையைத் திறந்திருக்கும் திருவாட்டி டான் பெய் சீ, 44. உடன் சுற்றுப்புற நீர்வளத்துறை மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்