விற்கப்படாத தனது எஞ்சியுள்ள வீடுகளின் மறுவிற்பனைத் திட்டத் தின் முதல் கட்டத்தில் 93 விழுக் காட்டு வீடுகளை மக்கள் வாங்கி யுள்ளனர் என்று வீடமைப்பு வளர்ச் சிக் கழகம் நேற்று தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த விற் பனைத் திட்டத்தில் மொத்தம் 1,394 வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டன. அதில் 93 விழுக்காடு, அதா வது 1,300 வீடுகளுக்கு மக்கள் பதிந்து கொண்டுள்ளனர். அந்த வீடுகளுக்கு மொத்தம் 6,102 விண்ணப்பங்கள் கிடைக் கப் பெற்றன. அதாவது ஒரு வீட் டுக்கு நான்கு விண்ணப்பதாரர்கள் இருந்தனர்.
ஈரறை 'ஃப்ளெக்சி', மூவறை, நான்கறை, ஐந்தறை, மூன்று தலை முறை, 'எக்சகியூடிவ்' என ஆறு வகையான வீடுகளை வாங்குவதில் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது என்று வீவக தெரி வித்தது. ஆண்டுக்கு இரு முறை நடை பெறும் எஞ்சியுள்ள வீடுகள் மறு விற்பனைத் திட்டம், முன்னைய விற்பனைத் திட்டங்களிலும் மறு விற்பனை திட்டங்களிலும் விற்கப் படாத வீடுகளை ஒன்றுசேர்க்கும். விற்பனையான 1,300 வீடு களில் 70 விழுக்காட்டை புதிதாக வீடு வாங்குபவர்கள் பதிந்துகொண் டனர் என்று குறிப்பிட்ட கழகம், வீடு வாங்கியோரில் ஐவரில் ஒரு வர் தங்களது வீட்டு சாவிகளைப் பெற்றுக்கொண்டனர் என்றும் கூறியது.

