அமைச்சர் சான்: இன, சமய நல்லிணக்கம் ஒரு பொக்கிஷம்

அமைச்சர் சான்: இன, சமய நல்லிணக்கம் ஒரு பொக்கிஷம்

1 mins read
e98d0270-39cd-480c-a30c-93a96e184868
-
Google News Preferred Icon

முஹம்மது ஃபைரோஸ்

பல இன, பல சமய மக்கள் பரஸ்பர மரியாதையுடன் வாழும் சிங்கப்பூரில் ஒரு சமயத்தினரின் பண்டி கையை மற்ற சமயத்தினரும் இணைந்து கொண்டாடும் நிகழ்வை மற்ற நாடுகளில் அடிக் கடி பார்க்க இயலாது என்று பிர தமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் ஒட்டுமொத்த சமு தாயமும் தனித்தன்மை வாய்ந்தது என்றும் இங்குள்ள மக்கள் இனம், சமயம், மொழி பேதமின்றி நல்லி ணக்கத்துடன் வாழ்வதாகக் குறிப் பிட்ட அவர், இந்த அரிய நிகழ்வை நாம் ஒருபோதும் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார்.

"இங்கு காணப்படும் நிகழ்வு களை உலகில் பிற நாடுகளில் காண்பது மிக அரிது. எனவே, இந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாப் பது மிக மிக அவசியம்," என்ற அமைச்சர் சான், இதனை நாம் அடுத்து வரும் தலைமுறையினரிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டி யது நமது கடமை என்று சொன்னார்.

நிகழ்ச்சியில் பங்கேற்று மூத்தோருக்கு 'ஆங் பாவ்' அன்பளிப்பு பாக்கெட்டுகளை வழங்கி, சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார் பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் (நடுவில்).