மலேசியா நாட்டுக்குள்ளும் இந்த வட்டாரத்தைச் சேர்ந்த சில நாடுகளுக்கும் போதைப்பொருட் களை விநியோகிப்பதாக நம்பப் படும் ஒரு போதைக் கும்பலைப் பற்றி அரச மலேசிய போலிசின் போதைப்பொருள் குற்றச்செயல் புலன்விசாரணைத் துறையும் சிங் கப்பூரின் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவும் கூட்டு புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கின்றன. போதைப்பொருள் கும்பல் உறுப் பினர்களில் பலர் சிங்கப்பூரர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் மலேசியாவில் போதைப்பொருள் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றும் கருதப்படு கிறது. மத்திய போதைப்பொருள் ஒழிப் புப் பிரிவும் மலேசியாவின் போதைப்பொருள் புலன்விசார ணைத் துறையும் அணுக்கமாகச் சேர்ந்து செயல்பட்டு அந்தக் கும்பல் கட்டமைப்பைக் கண்டு பிடித்து இருக்கின்றன.
வட்டார போதைக் கும்பல் முறியடிப்பு; சிங்கப்பூரர்கள் ஆறு பேர் கைது
1 mins read

