பொங்கோல் வாட்டர் ஃபிரண்டில் இருக்கும் மரினா கன்ட்ரி மனமகிழ் மன்றத்திற்குப் பக்கத்தில் சனிக்கிழமை மாலை மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் கடலில் நீர்நாய்கள் மீது கற்களை இரு தடவை வீசினார். ஆனால் நீர்நாய்களுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்த திருவாட்டி சோங் என்ற குடும்ப மாது கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று தெரிவித்தது. இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியை இணையத்தில் நீர்நாய் பற்றிய தளத்தில் சனிக்கிழமை இரவு பலரும் பகிர்ந்துகொண்டனர்.
நீர்நாய்கள் மீது கற்களை வீசினார்
1 mins read

