ஃபேமிலிஸ் ஃபார் லைஃப்' என்ற மன்றத்தின் 'இன்னமும் இணைபிரியா தம்பதிகள் மகிழ்உலா' நிகழ்ச்சி நேற்று முன்தினம் ஃபோர்ட் கேனிங் கிரீன் பூங்காவில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட ஜோடிகள் கலந்துகொண்டு தங்கள் காதலையும் கடப்பாட்டையும் மறுஉறுதிப்படுத்தினர். மகிழ்ச்சிகரமான, வலுவான தாம்பத்திய வாழ்க்கைக்குப் போதிய நேரத்தை ஒதுக்கவும் அவர்கள் உறுதி கூறினர். அந்த நிகழ்ச்சியில் ஐந்து ஜோடிகளுக்கு பொருட்கள் வாங்குவதற்குரிய பற்றுச்சீட்டுகளும் கடலோர பூந்தோட்டங்க ளுக்குச் செல்வதற்கான நுழைவுச்சீட்டுகளும் கிடைத்தன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் இணைப் பேராசிரியர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் (நடுவில்) இந்த மகிழ்உலாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படம்: ஃபேமிலிஸ் ஃபார் லைஃப் மன்றம்

