காதலியை உதைத்து துன்புறுத்திய ஆடவருக்கு நான்கு மாதச் சிறை

காதலியை உதைத்து துன்புறுத்திய ஆடவருக்கு நான்கு மாதச் சிறை

1 mins read
Google News Preferred Icon

காதலியின் கால்களில் உதைத்தும் முள்கரண்டியைக் கொண்டு அவரது கைகளி பலமுறை குத்தியும் துன்புறுத்திய துப்புரவாளருக்கு நேற்று நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் தொடர்ந்த பிரச்சினையைத் தீர்க்க சென்ற ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் 48 வயது முகமது அசாகார் இப்ராகிம், 38 வயது திருவாட்டி நூர் அயின் நடாஷா ஹுசைனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

விவாதம் முற்றிய நிலையில் அந்த ஆடவர் தனது காதலியைத் துன்புறுத்தியுள்ளார். முள்கரண்டியைக் கொண்டு குத்தியதால் அவரது இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இருவரும் இன்றுவரை சேர்ந்தே வாழ்வதாக நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது. குற்றங்களை ஒப்புக்கொண்ட ஆடவருக்கு இரண்டு ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையோ $5,000 வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.