கல்வி அமைச்சு பாலர் பள்ளி மாணவர் சேர்க்கை

கல்வி அமைச்சு பாலர் பள்ளி மாணவர் சேர்க்கை

1 mins read
Google News Preferred Icon

கல்வி அமைச்சு தான் நடத்தும் பாலர் பள்ளிகளில் மேலும் பல மாணவர்களைச் சேர்த்துகொள்ள தயாராகியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்க ளுக்கு பாலர் பள்ளிகள் பொது வரவேற்பு தினங்களை நடத்து கின்றன. அடுத்த ஆண்டு பாலர் பள்ளி முதல் நிலை (கே 1) வகுப்பில் சேரவிருக்கும் பிள்ளைகளுக்கு மொத்தம் 24 கல்வி அமைச்சு பாலர் பள்ளிகள் பதிவைத் தொடங்கியுள்ளன. அவற்றில் 13 பள்ளிகளில் பதிவு சென்ற வாரம் தொடங்கி விட்டன.

மற்ற 11 பள்ளிகளில் மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான பதிவு நடைபெற உள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக் கும் இடையிலான காலகட்டத் தில் பிறந்த சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி பிள்ளைகளுக்குத் தற்போதைய பதிவு நடைபெறுகி றது. பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகளில் அமைந்துள்ள பாலர் பள்ளிகளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெற்றோர்கள் சென்று பார்வையிட லாம். அந்தந்த மையங்களைப் பற்றிய மேல் விவரங்களையும் அங்கு வழங்கப்படும் வசதிக ளைப் பற்றியும் பெற்றோர்கள் அறிந்துகொள்ளலாம்.