சிங்கப்பூருக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையே அணுக்கமான நிதித் தொழில்நுட்ப ஒத்துழைப்பு

சிங்கப்பூருக்கும் மகாராஷ்டிராவுக்கும் இடையே அணுக்கமான நிதித் தொழில்நுட்ப ஒத்துழைப்பு

1 mins read

சிங்கப்பூர் நாணய ஆணையமும் இந்தியாவின் மகாராஷ்டிர அரசாங் கமும் இம்மாதம் 18ஆம் தேதி புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன. அது இரு சந்தைகளிலும் நிதித் தொழில்நுட்பத்தை மேம்ப டுத்துவதில் ஒத்துழைப்பை வலுப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்தப் புரிந்துணர்வுக் குறிப்பு மகாராஷ்டிராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது கையெழுத்தா னது.

சிங்கப்பூரில் நிதித் தொழில் நுட்பத்தை மையமாகக் கொண்டு வர்த்தகத்தைத் தொடங்கும் நிறுவ னங்கள் மும்பை நிதித் தொழில் நுட்ப மையத்தில் செயல்படும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்க ளுடன் வர்த்தக உறவுகளை வளர்த்துகொள்ள இந்த உடன்பாடு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. உடன்பாட்டின் ஓர் அங்கமாக, மகாராஷ்டிர அரசாங்கமும் சிங்கப் பூர் நாணய ஆணையமும் நிதித் தொழில்நுட்பம் தொடர்பான கல் வித் திட்டங்களைக் கூட்டாக உரு வாக்கும்.