உற்பத்தித் துறை ஜனவரியில் 17.9% ஏற்றம்

உற்பத்தித் துறை ஜனவரியில் 17.9% ஏற்றம்

1 mins read
3fb18e07-9133-4425-87a1-5cea8447e916
-
Google News Preferred Icon

சிங்கப்பூரின் உற்பத்தித் துறை 2018ஆம் ஆண்டை உற்சாகத்து டன் தொடங்கியுள்ளது. அதன் ஜனவரி மாத உற்பத்தி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 17.9 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என்று பொருளியல் வளர்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட அதன் அறிக் கையில் தெரிவித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் தில் உற்பத்தித் துறை திருத்தப் பட்ட விகிதமாக 3.4% சரிந்தது. அது 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு ஏற்பட்ட முதலாவது சரிவாகும். அதன் பிறகு இவ்வாண்டு ஜனவரி மாத உற்பத்தித் துறை வளர்ச்சி, பொருளியல் உற்சா கத்தை பன்மடங்காக்கியது. பருவத்துக்கு ஏற்றவாறு சரி செய்யப்பட்ட மாதாந்திர அடிப்படை யிலான விகிதம் ஜனவரி மாதத்தில் 6.7% அதிகரித்தது.

பொருளியல் நிபுணர்களின் 7.5 விழுக்காட்டு முன்னுரைப்பைக் காட்டிலும் உற்பத்தி 17.9% வளர்ச்சி கண்டு ஊக்கமளித்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்