கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 700 பேர் அத்துமீறி நுழைதலுக்காக கைது செய்யப்படுகின்றனர் என்று உள்துறை அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நாடாளுமன்றத்தில் நேற்று கூறியுள்ளார். அவர்களில் 12 விழுக்காட்டினர் (84 பேர்) 16 வயதுக்குக் குறைவானவர்கள். இதுபோன்ற குற்றங்களைப் புரியும் இளையர்கள், சக நண்பர்களின் வலியுறுத்தல்களாலும் உல்லாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்திலும் அவ்வாறு செய்வதாக போலிசாரின் அனுபவங்களில் தெரியவருவதாக அவர் குறிப்பிட்டார். தனியார் நிலங்களிலோ அரசு நிலங்களிலோ பாலியல் செயல்கள், கடற்கரையில் மீன்பிடிக்க, டுரியான் பழங்களைப் பறிக்க என பல காரணங்களுக்காக அந்த நபர்கள் அத்துமீறி நுழைவதாக அவர் தெரிவித்துள்ளார். வீடமைப்புக் கட்டடங்களின் கூரைகளுக்கும் சிலர் செல்கின்றனர்.
அத்துமீறி நுழைதலுக்காக ஆண்டுக்கு 700 பேர் கைது செய்யப்படுகின்றனர்
1 mins read

