மானபங்கம் குறித்த சட்டம் மறுஆய்வு செய்யப்படும்

மானபங்கம் குறித்த சட்டம் மறுஆய்வு செய்யப்படும்

1 mins read

அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சட்ட மறுஆய்வின் ஒரு பகுதி யாகப் பெண்களை மானபங்கப் படுத்துபவர்களுக்கு எதிரான சட்டமும் மறுஆய்வு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் அம்ரின் அமின் கூறியுள்ளார். பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும் வேலையிடங்களிலும் தொழில்நுட்பம் மூலமும் மானபங் கம் செய்யப்படுவது குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தான் அஸுரா மொக்தார் எழுப்பிய கேள்விக்கு திரு அமின் பதிலளித்தார். தற்போது மானபங்கம் குறித்த சட்டத்தில் பெண்களை மானபங் கப்படுத்துபவர்கள் தண்டிக்கப் படுவார்கள்.

ஆனால் ஆண்களை மானபங்கப்படுத்துபவர்கள் மீது குற்றம் சாட்ட தற்போதைய சட் டம் வலுப்படுத்தப்படுமா என்றும் திருவாட்டி இந்தான் கேட்டார். மானபங்கம் குறித்த சட்டப் பிரிவு 509ல் உள்ள சட்டம் திருத் தப்பட்டு வலுப்படுத்தப்படும் என்று திரு அமின் உறுதியளித் தார். சென்ற ஆண்டு டிசம்பரில் ஆண்களை மானபங்கப்படுத்திய ஆடவர் ஒருவருக்கு நீதிமன்றம் தக்க தண்டனை அளிக்கவில்லை என்பது அரசு தரப்பின் வாதம்.